என் மலர்
தமிழ்நாடு

காதல் விவகாரத்தில் விபரீதம்: திருவாரூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கத்தியால் குத்தி கொலை- வாலிபர் கைது

- ரத்த வெள்ளத்தில் சிராஜுதீன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமது அசாருதீனை கைது செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அத்திக்கடையைச் சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 58). இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர். அதே ஊரை சேர்ந்தவர் முகமது அசாருதீன் ( 32). இவருக்கு திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் சிராஜுதீனின் உறவினர் பெண் ஒருவரை முகமது அசாருதீன் ஒருதலையாக காதல் செய்து வந்துள்ளார். திருமணமான நிலையில் வேறொரு பெண்ணை காதலிக்கிறாரே என்று கூறி அதனை சிராஜுதீன் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எப்படியாவது சிராஜுதீனை கொலை செய்து விட வேண்டும் என திட்டம் தீட்டிய அசாருதீன், நேற்று இரவு கடைவீதி பகுதியில் மறைந்திருந்துள்ளார். அப்போது கடை வீதியில் இருந்து வீட்டுக்கு வந்த சிராஜுதீனை வழிமுறைத்து கையில் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் பலமுறை குத்தினார். இதில் நிலைகுலைந்த ரத்த வெள்ளத்தில் சிராஜுதீன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து சிராஜுதீனின் மகன் ரியாவுதீன் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்து கொரடாச்சேரி போலீசார் சிராஜுதீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமது அசாருதீனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.