என் மலர்
தமிழ்நாடு
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
பாராளுமன்ற தேர்தல்: நெல்லை, தென்காசி தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சி
Byமாலை மலர்27 Jan 2024 3:41 PM IST (Updated: 27 Jan 2024 4:26 PM IST)
- அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
- தென்சென்னை தொகுதியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவார் என பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நெல்லை, தென்காசி பாராளுமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யாவும், தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மயிலை ராஜனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
முன்னதாக, தென்சென்னை தொகுதியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X