என் மலர்
தமிழ்நாடு
மாமல்லபுரம் கலங்கரை விளக்கம், கடல்சார் அருங்காட்சியகத்தை பார்க்க தனி கட்டணம்
- மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது
- மாமல்லபுரத்தில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இங்குள்ள புராதன சின்னங்களை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைகல் மற்றும் குடவரை கோவில் பகுதிகளை அருகில் சென்று பார்த்து ரசிக்க, மத்திய தொல்லியல் துறை உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.40, வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கிறது. ஒரு இடத்தில் நுழைவுச்சீட்டு பெற்று அனைத்து பகுதிகளையும் பார்வையிடலாம்.
ஆனால் தொல்லியல்துறை வழிப்பாதையில் கலங்கரை விளக்கம், கடல்சார் அருங்காட்சியகம் அமைந்து இருப்பதால் அதையும் பார்க்கலாம் என கருதி சுற்றுலா பயணிகள் சென்றால் அனுமதிப்பது கிடையாது.
இதற்கு கப்பல் போக்குவரத்து துறையினர்தனியாக கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் பயணிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறும்போது, மாமல்லபுரத்தில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும்.
தற்போது கோடை விடுமுறை தொடங்கும் நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் மத்திய அரசின் இரு துறைகளும் ஒரே கட்டணத்தில் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்றனர்.