என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![மத்திய அரசின் அதிகாரிகள் குழு 13-ந் தேதி கோவை வருகை: வானதி சீனிவாசன் தகவல் மத்திய அரசின் அதிகாரிகள் குழு 13-ந் தேதி கோவை வருகை: வானதி சீனிவாசன் தகவல்](https://media.maalaimalar.com/h-upload/2023/09/02/1942982-vanathisrinivasan.webp)
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
மத்திய அரசின் அதிகாரிகள் குழு 13-ந் தேதி கோவை வருகை: வானதி சீனிவாசன் தகவல்
By
Maalaimalar10 Oct 2023 3:29 PM IST (Updated: 10 Oct 2023 4:26 PM IST)
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மத்திய அரசின் அதிகாரிகள் உயர்மட்டக்குழு வருகிற 13-ந் தேதி கோவை வருகிறது.
- விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு.
கோவை:
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
தென்னை விவசாயிகள் மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகளின் கோரிக்கைகள், பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அரசின் அதிகாரிகள் உயர்மட்டக்குழு வருகிற 13-ந் தேதி கோவை வருகிறது.
கோவையில் கடந்த வாரம் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதியளித்தபடி இந்த குழு தேங்காய், கொப்பரை விலை, தென்னை நார் தொழில் தொடர்பாக கோவை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு நேரில் வருகை தருவர். விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
X