என் மலர்
தமிழ்நாடு
சேத்துப்பட்டு அருகே கார் சிறுபாலத்தில் மோதி பெண் பலி
- காரில் பயணம் செய்த சிவப்பிரகாசம் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
- போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
காஞ்சிபுரம் இ.பி. நகரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 57). மனைவி மாலதி (53). மகள் நிவேதா (24). இவர்கள் அனைவரும் காரில் நேற்று மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றனர்.
காரை சிவப்பிரகாசம் ஓட்டி சென்றார். சாமி தரிசனம் முடிந்து இன்று காலை 7 மணி அளவில் சேத்துப்பட்டு வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கோழி புலியூர் கூட்ரோடு அருகே கார் வந்து கொண்டிருந்தது.
'அப்போது தூக்க கலக்கத்தில் இருந்த சிவப்பிரகாசம் காரை தாறுமாறாக ஓட்டினார். இதில் அருகே இருந்த சிறு பாலத்தில் கார் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
காரில் பயணம் செய்த சிவப்பிரகாசம் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் சிவப்பிரகாசத்தையும் நிவேதாவையும் மீட்டனர். அப்போது மாலதி இறந்து விட்டதாக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கூறியதால் தந்தை, மகளை வந்தவாசி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்தவர்கள் மாலதிக்கு உயிர் இருப்பதாக கூறி அவரை காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாலதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தேசூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.