என் மலர்
தமிழ்நாடு
X
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,600-ஐ தாண்டியது
Byமாலை மலர்3 July 2022 8:57 PM IST (Updated: 3 July 2022 9:53 PM IST)
- சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1072 பேருக்கு கொரோனா.
- கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 1,487 குணமடைந்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள தினசரி கொரோனா பாதிப்பு நிலவரப்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,672- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 14,504- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,487- பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 1072 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 373 பேருக்கும், கோவையில் 145 பேருக்கும், திருவள்ளூரில் 131 பேரும் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
Next Story
×
X