என் மலர்
தமிழ்நாடு
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம்
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 28-ந்தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.
- விரைவில் சட்டசபை கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில் அதுகுறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு.
இன்று காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 28-ந்தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலையில் அமைச்சரவை கூடுவது முக்கியத்துவம் பெறுகிறது. விரைவில் சட்டசபை கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில் அதுகுறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும் இந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் புதிய தொழில்களை தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டின் கூட்டத் தொடரின் முதல் கூட்டத்திற்கு கவர்னர் அழைக்கப்படுவதும், அவர் உரை நிகழ்த்துவதும் மரபாக உள்ளது. முதல்-அமைச்சர் வெளிநாடு செல்வது, சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது என வரிசையாக பெரிய நிகழ்வுகள் வரவுள்ளன. இவையெல்லாம் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடைபெற வேண்டியதுள்ளது.
எனவே சட்டசபையில் கவர்னர் உரை, பட்ஜெட் கூட்டத் தொடர் என தொடர்ச்சியான நிகழ்வுகளை அரசு நடத்த வேண்டிய நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.