என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணம்: தமிழக கவர்னர் பேச்சு இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணம்: தமிழக கவர்னர் பேச்சு](https://media.maalaimalar.com/h-upload/2023/11/25/1986950-rnravi.webp)
X
இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணம்: தமிழக கவர்னர் பேச்சு
By
மாலை மலர்25 Nov 2023 3:45 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.
- சாதாரண மக்களுக்கு நீதி விலை உயர்ந்ததாக உள்ளது.
சென்னை:
சென்னை பெருங்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.
நீதிமன்றங்கள் மட்டுமின்றி சட்ட பல்கலைக்கழகங்களிலும் அரசியலமைப்பு சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்.
சுதந்திரத்திற்காக போராடும்போது நாம் ஒற்றுமையாக இருந்தோம். தற்போது, அவரவர் தாய் நிலம் என்றும் தாய்மொழி என்றும் பிரிந்து உள்ளோம்.
மாநிலங்கள் என்ற அளவில் பிரித்து நாம் வைக்கப்பட்டுள்ளோம். நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துகள் இங்கே பரவி உள்ளது.
சாதாரண மக்களுக்கு நீதி விலை உயர்ந்ததாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
X