என் மலர்
தமிழ்நாடு
சற்று குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்
- கடந்த 4-ந் தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்து 960-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
- தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் அதிரடியாக நேற்று குறைந்திருந்தது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்து, கடந்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னரும் தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்ததை பார்க்க முடிந்தது.
அதன்படி, கடந்த 4-ந் தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்து 960-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. மேலும் விலை அதிகரிக்கக்கூடும் எனவும், இதனால் ரூ.57 ஆயிரத்தை விரைவில் தங்கம் தாண்டிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 7-ந் தேதி கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் குறைந்தது. நேற்று முன்தினம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.
நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்து காணப்பட்டது. தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் நேற்று குறைந்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,025-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ.56,240
08-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800
07-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800
06-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960
05-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-10-2024- ஒரு கிராம் ரூ. 100
08-10-2024- ஒரு கிராம் ரூ. 102
07-10-2024- ஒரு பவுன் ரூ. 103
06-10-2024- ஒரு பவுன் ரூ. 103
05-10-2024- ஒரு பவுன் ரூ. 103