என் மலர்
தமிழ்நாடு
X
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
ByMaalaimalar10 Jun 2024 11:02 AM IST
- வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது.
- மெயினருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் கடந்த 8-ந் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தடையானது நேற்று முழுவதும் நீடித்தது. இந்நிலையில் இன்று காலை அருவியில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
தற்போது கோடை விடுமுறை முடிவுக்கு வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக உள்ள நிலையில் மெயினருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
Next Story
×
X