என் மலர்
தமிழ்நாடு

X
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
By
Suresh K Jangir5 Sept 2022 12:00 PM IST

- குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும்.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இடையிடையே இதமான வெயில் அடிக்கும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.
இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள். தற்போது சீசன் காலம் முடிந்து விட்டது. சாரல் மழை பெய்யவில்லை.
ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. சுற்றுலா பயணிகள் இன்று அருவிகளில் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
Next Story
×
X