search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திரவுபதி முர்முவை முன்னுதாரணமாக கொண்டு வாழ்க்கையில் சாதிப்போம்- பழங்குடி மக்கள் உறுதிமொழி
    X

    ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றதை முன்னிட்டு ஆடி, பாடி மகிழ்ந்த பழங்குடி மக்கள்

    திரவுபதி முர்முவை முன்னுதாரணமாக கொண்டு வாழ்க்கையில் சாதிப்போம்- பழங்குடி மக்கள் உறுதிமொழி

    • திரவுபதி முர்மு தேர்தலில் வெற்றி பெற்றதை அறிந்தது முதலே அந்த கிராமங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
    • திரவுபதி முர்மு நிச்சயம் எங்கள் தேவைகளை தீர்த்து வைப்பார் என பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.

    அரவேணு:

    ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா ஆதரவுடன் போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். நேற்று அவர் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

    திரவுபதி முர்மு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் மலை மாவட்டமான நீலகிரியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கோத்தகிரி அருகே கறிகியூர், மெட்டுக்கள், பாவியூர், அரக்கோடு தாளமுக்கை என 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின இருளர் கிராமங்கள் உள்ளன.

    திரவுபதி முர்மு தேர்தலில் வெற்றி பெற்றதை அறிந்தது முதலே அந்த கிராமங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. அவர்கள் கிராமங்களில் ஊர்வலமாகச் சென்று பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    திரவுபதி முர்மு பதவியேற்பை முன்னிட்டு நேற்றும் பழங்குடியின மக்கள் முக்கிய இடங்களில் கூடி பாரம்பரிய இசையான அரக்கோன் இசைத்து நடனமாடி மகிழ்ந்தனர். திரவுபதி முர்முவை முன்னுதாரணமாக கொண்டு பழங்குடியினர் அனைவரும் வாழ்வில் முன்னேற்றப்பாதைக்கு செல்ல வேண்டும் என அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தங்களின் நிறைகுறைகளை அறிந்த ஒரு தலைவராக திரவுபதி முர்மு விளங்குகிறார், எனவே நிச்சயம் அவர் எங்கள் தேவைகளை தீர்த்து வைப்பார் என பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×