என் மலர்
தமிழ்நாடு
X
பெரியார் நினைவிடத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
Byமாலை மலர்17 Sept 2024 2:53 PM IST (Updated: 17 Sept 2024 7:59 PM IST)
- பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக்கழத் தலைவர் விஜய் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- சமத்துவம், சம உரிமை, சமூக நீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்து இருந்தார்.
சென்னை:
தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூர் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பெரியார் பிறந்தநாளில் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என இன்று காலை விஜய் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X