என் மலர்
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய்
- எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
- அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகளை எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முதலே தொண்டர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகளை எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சமூக வலைதளத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அஇஅதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.