என் மலர்
தமிழ்நாடு
X
உயரப் பறந்த த.வெ.க. கொடி இதுவா?
Byமாலை மலர்19 Aug 2024 5:36 PM IST
- தமிழக வெற்றிக் கழம் கட்சி கொடி சில நாட்களில் அறிமுகமாகிறது.
- த.வெ.க. கொடி அறிமுக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வருகிற 22 ஆம் தேதி கட்சி கொடி அறிமுக விழா நடைபெற உள்ள நிலையில், கொடியேற்றி ஒத்திகை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
எனினும், இது தான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. வருகிற 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார். இதற்காக சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி அறிமுக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், 45 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. கட்சி கொடி அறிமுக விழாவில் பங்கேற்க தொகுதி வாரியாக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X