என் மலர்
தமிழ்நாடு
X
நேர மேலாண்மையில் சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர் மு.க. ஸ்டாலின்- வைரமுத்து புகழாரம்
Byமாலை மலர்28 April 2024 9:20 AM IST
- 40 ஆண்டுகளாய்ப் பார்த்தும் பழகியும் வருகிறேன்.
- பருவம் கூடக் கூடப் பக்குவம் கூடிவருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேர மேலாண்மையில் சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர் என்று கவிஞர் வைரமுத்து புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சரை நேற்று
முகாம் அலுவலகத்தில்
சந்தித்தேன்
குறித்த நேரம் காலை 10.15
நான் அடைந்த நேரம் 10.14
முதலமைச்சர்
வந்து வரவேற்ற நேரம் 10.15
நேர மேலாண்மையில்
சர்வதேச ஒழுங்கைக்
கடைப்பிடிக்கிறார்
40 ஆண்டுகளாய்ப்
பார்த்தும் பழகியும் வருகிறேன்
பருவம் கூடக் கூடப்
பக்குவம் கூடிவருகிறது
வயது கூடக் கூட
மரம்
வைரம் பாய்வது மாதிரி
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
X