என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![விக்ரம் திரைப்படம் பார்த்துவிட்டு கமல்ஹாசனை பாராட்டிய வானதி சீனிவாசன் விக்ரம் திரைப்படம் பார்த்துவிட்டு கமல்ஹாசனை பாராட்டிய வானதி சீனிவாசன்](https://media.maalaimalar.com/h-upload/2022/07/05/1723830-vanathisrinivasan.jpg)
கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
விக்ரம் திரைப்படம் பார்த்துவிட்டு கமல்ஹாசனை பாராட்டிய வானதி சீனிவாசன்
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள விக்ரம் திரைப்படம் வசூலை கோடி கணக்கில் வாரி குவித்து வருகிறது.
- கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார்.
கோவை:
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த மாதம் 3-ந் தேதி விக்ரம் திரைப்படம் வெளியானது. நீண்ட நாள் கழித்து கமல்ஹாசனின் படம் வெளியானதால், அவரது ரசிகர்களும், கட்சியினரும் உற்சாகம் அடைந்தனர்.
வெளியான நாள் முதல் இன்று வரை விக்ரம் திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடி வருகிறது. நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள விக்ரம் திரைப்படம் வசூலையும் கோடி கணக்கில் வாரி குவித்து வருகிறது.
இந்த திரைப்படத்தை பார்த்து பல்வேறு திரைப்பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் நேற்று கோவையில் உள்ள ஒரு தியேட்டரில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தை பார்த்துள்ளார்.
படத்தை பார்த்து விட்டு கமல்ஹாசனையும் அவர் வாழ்த்தி பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
சட்டசபை தேர்தலில் உங்களை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் நடித்து சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தை பார்த்தேன். படம் அருமையாக உள்ளது. உங்களது கலைப்பணியால் தொடர்ந்து நீங்கள் எங்களை மகிழ்விக்க வேண்டும் என பாராட்டியுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து கமல்ஹாசன் போட்டியிட்டார். இதில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.
தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசனும், வானதி சீனிவாசனும் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி பிரசாரம் மேற்கொண்டனர். இந்தநிலையில் கமல்ஹாசனை வானதி சீனிவாசன் பாராட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.