என் மலர்
தமிழ்நாடு
இயக்குனர் ஹரியின் தந்தை மறைவிற்கு விஜயகாந்த் இரங்கல்
- இயக்குநர் ஹரி என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் பற்றும் கொண்டவர்.
- தந்தையை இழந்து வாடும் இயக்குநர் ஹரிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார்.
அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இயக்குனர் ஹரியின் இல்லத்தில் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் மறைவிற்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
இயக்குநர் ஹரி என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் பற்றும் கொண்டவர். தந்தையை இழந்து வாடும் இயக்குநர் ஹரிக்கும், அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.