என் மலர்
தமிழ்நாடு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
- 26-ந்தேதி மாலைக்குள் வேட்பு மனுவை திரும்பப்பெறலாம்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகிறது.
இதையொட்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 21-ந்தேதி கடைசி நாளாகும். 24-ந்தேதியன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 26-ந்தேதி (புதன்கிழமை) மாலைக்குள் வேட்பு மனுவை திரும்பப்பெறலாம்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.