என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு- பாபநாசம், அடவிநயினார் அணைகள் நீர்மட்டம் உயர்வு குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு- பாபநாசம், அடவிநயினார் அணைகள் நீர்மட்டம் உயர்வு](https://media.maalaimalar.com/h-upload/2022/08/11/1744434-papanasamdam.jpg)
பாபநாசம் அணை
குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு- பாபநாசம், அடவிநயினார் அணைகள் நீர்மட்டம் உயர்வு
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- இன்று காலை வரை பாபநாசத்தில் 9 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
- சேர்வலாறு அணையில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை சற்று குறைந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்துவிட்டது.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1920 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 143 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 107.50 அடியாக உயர்ந்துள்ளது. நேற்றைய அளவை விட இன்று சுமார் 2 அடி உயர்ந்துள்ளது.
இன்று காலை வரை பாபநாசத்தில் 9 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணையில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 120.27 அடியாக உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பெய்து வந்த மழையால் அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே ராமநதி, கடனா அணைகள் நிரம்பிவிட்ட நிலையில் 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 128.50 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் இன்று 130.25 அடியாக உயர்ந்துள்ளது.
குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனர்.