search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    200 வீடுகளை ஒரு வாரமாக சூழ்ந்து நிற்கும் மழை நீர்
    X

    200 வீடுகளை ஒரு வாரமாக சூழ்ந்து நிற்கும் மழை நீர்

    • வீடுகளுக்கு விஷ பூச்சிகள் பாம்பு உள்ளிட்டவை வருகின்றன.
    • 4 நாட்களுக்கு மேல் மழை நீர் தேங்கி உள்ளதால் கருப்பு நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.

    பொன்னேரி:

    ஃபெஞ்ஜல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டியது. பொன்னேரி, மீஞ்சூர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. மழை விட்டு ஒரு வாரம் ஆகியும் இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி உள்ளது.

    மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு கலைஞர் நகர் முதல் தெரு, 2-வது தெரு ராஜேஸ்வரி நகர், பிரேமானந்தா பள்ளி தெரு உள்ளிட்ட இடங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது.

    குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவிற்கு மழை நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    மேலும் மழை நீருடன் கழிவு நீர் கலந்து நிறம் மாறி துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.


    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மீஞ்சூர் பகுதியில் தாழ்வான இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. வீடுகளை சூழ்ந்து உள்ள தண்ணீரால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    வீடுகளுக்கு விஷ பூச்சிகள் பாம்பு உள்ளிட்டவை வருகின்றன. இதனால் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து வார்டு உறுப்பினர் சுகன்யாவிடம் கேட்டபோது, மழைக்காலங்களில் தொடர்ந்து இப்பகுதியில் தண்ணீர் தேங்கும் பிரச்சனை உள்ளது. மழை நீர் வெளியேற உள்ள குழாய் மிகவும் சிறிதாக உள்ளது. மேலும் மழைநீர் கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளன.

    பொன்னேரி-மீஞ்சூர் சாலையில் கல்வெட்டு அமைத்து மழைநீர் வெளியேற நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது 4 மின்மோட்டார்கள் மூலம் மழை நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் குறையாமல் உள்ளது என்றார்.

    மகாபலிபுரத்தில் பெய்த கனமழையால் இன்னமும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. பொதுப்பணித்துறை சாலை, கல்பாக்கம் சாலை, தேவநேரி, சிற்பக்கல்லூரி எதிரே உள்ள பகுதிகளில் புதிதாக உள்ள வீட்டு மனைகளில் மனை வாங்கியோர் சவுடு மணல்களை குவித்து வைத்திருப்பதால் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. 4 நாட்களுக்கு மேல் மழை நீர் தேங்கி உள்ளதால் கருப்பு நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.

    Next Story
    ×