search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2026 சட்டமன்ற தேர்தல்: பிரச்சார யுக்திகளை வகுக்க ராபின் சர்மாவின் நிறுவனத்துடன் தி.மு.க. ஒப்பந்தம்?
    X

    2026 சட்டமன்ற தேர்தல்: பிரச்சார யுக்திகளை வகுக்க ராபின் சர்மாவின் நிறுவனத்துடன் தி.மு.க. ஒப்பந்தம்?

    • ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்கு ராபின் சர்மாவின் நிறுவனம் முக்கிய பங்காற்றியது.
    • கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு 'பென் டீம்' செயல்பட்டு பிரசார வியூகம் வகுத்தது.

    2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.வுக்கு பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவனம் பணியாற்றியது. அந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்ததும் 'ஐபேக்' நிறுவனம் பணியை முடித்துக்கொண்டு வெளியேறியது.

    இப்போது நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு 'பென் டீம்' செயல்பட்டு பிரசார வியூகம் வகுத்தது.

    இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார யுக்திகளை வகுக்க ராபின் சர்மாவின் SHOWTIME CONSULTANCY நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கும் மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சிக்கும், மகாராஷ்டிராவில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவிற்கும் ராபின் சர்மாவின் SHOWTIME CONSULTANCY நிறுவனம் தேர்தல் யுக்திகளை வகுத்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×