என் மலர்
தமிழ்நாடு

இந்தி திணிப்பு - பா.ஜ.க. அரசை கண்டித்து 25-ந்தேதி போராட்டம் : தி.மு.க. அறிவிப்பு

- தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
- 25-ந்தேதி மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில்,
மதத்தின் பெயரால் பிற்போக்குச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. அரசின் சதி திட்டத்தை முறியடிக்க பகுத்தறிவுப் பிரசாரம் மேற்கொள்வோம்!
ஒன்றிய கல்வி அமைச்சர் ஆணவப் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு, தமிழ்நாட்டின் கல்வி நிதியை வழங்கும் வரையில் தமிழ்நாடு முழுவதும் தொடர் மாணவர் போராட்டம்!
இந்தியை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக 25-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-ந்தேதி மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 21-02-2025 வெள்ளிக்கிழமை, காலை 09.00 மணியளவில், சென்னை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, "அண்ணா அறிவாலயத்தில்", எனது தலைமையில், மாணவர் அணி இணைச் செயலாளர்கள் சி. ஜெரால்டு, எஸ்.மோகன் மற்றும் துணைச் செயலாளர்கள் சேலம் இரா.… pic.twitter.com/Qyq68klhNg
— DMK (@arivalayam) February 21, 2025