என் மலர்
தமிழ்நாடு

மாணவர்கள் தனியார் பள்ளிக்கு போக அரசு பள்ளிகளில் இருமொழி கொள்கையை வைத்திருக்கிறார்களோ?- அண்ணாமலை கேள்வி

- தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை விட தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகமாக உள்ளனர்.
- மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் தமிழ்மொழி என்பது கட்டாயம் அல்ல.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலை கூறியதாவது:-
* மத்திய அரசு இந்தியை திணிப்பதாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
* இந்தி திணிக்கப்படவில்லை. யாரும் திணிக்கமாட்டார்கள். இதில் பாஜக தெள்ளத்தெளிவாக உள்ளது. பிரதமர் மோடியும் தெள்ளத்தெளிவாக உள்ளார்.
* புதிய கல்விக்கொள்கை பரிந்துரையை பிரதமர் மோடியிடம் அளிக்கும்போது முதல் மொழி தாய்மொழி, 2-வது பாடம் ஆங்கிலம், 3-வது மொழி இந்தி என இருந்தது. அதை பிரதமர் மோடி 3-வது மொழியாக இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மொழியை படிக்க வேண்டும் எனச் சொன்னார்.
* ஆனால் திமுக அமைச்சர்கள் மும்மொழிக் கொள்கை என்றால் இந்தி திணிப்பு என்ற தவறான பிரசாரத்தை முன் வைக்கிறார்கள்.
* தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை விட தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகமாக உள்ளனர். தனியார் பள்ளில் 56 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
* மெட்ரிக்குலேசனில் தமிழ்மொழி என்பது கட்டாயம் அல்ல. தெலுங்கு, அரபு, மலையாளம், கன்னடம், குஜராத், இந்தி, பரெஞ்ச், உருது போன்ற மொழிகள் உள்ளது.
* 56 லட்சம் மாணவர்கள் வேறொரு திட்டத்தில் போய் கொண்டிருக்கிறார்கள். அரசு பள்ளியில் படிக்கும் 52 லட்சம் மாணவர்களை மட்டும் கட்டாயமாக இருமொழிகளை படிக்க வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
* இதனால் அரசு பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அதிகமாகிறார்கள்.
* தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மார்க்கெட் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்.
* மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்வ வேண்டும் என்பதால் அரசு பள்ளிகளில் இருமொழி கொள்கைகளை வைத்திருக்கிறார்களா? எனக் கேள்வி கேட்கிறேன்.
* நடிகர் விஜய் சிபிஎஸ்சி பள்ளிக் கூடம் நடத்தி வருகிறார். 2017-ல் இருந்து 2052 வரை விஜய் தனது இடத்தை ஒரு அறக்கட்டளைக்கு லீஸ்க்கு கொடுத்துள்ளார். அந்த அறக்கட்டளை எஸ்.ஏ. சந்திரசேகர் பெயரில் ரிஜிஸ்டர் ஆகியுள்ளது. இந்த அறக்கட்டளை படூரில் விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் பள்ளி நடத்தி வருகிறது.
* அன்பில் மகேஷ் பிள்ளை பிரெஞ்ச் படிக்கிறது. அரசியல் தலைவர்கள் சிபிஎஸ்சி பள்ளி நடத்துகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் பிள்ளைகள் பிரெஞ்ச் படிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது என்ன விதத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை இரண்டு மொழியில் மட்டும் படிக்க சொல்கிறார்கள்.
* கலாநிதி வீராசாமி நடத்தும் மெட்ரிக் பள்ளியில் ஆங்கிலம் கட்டாயம். அதன்பின் தமிழ் உள்பட ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 30 லட்சம் மாணவர்கள் மும்மொழிக்கொள்கையை படிக்கிறார்கள் நான் கூறியதற்கு ஆதாரம் இல்லை என சொல்கிறார்கள். அப்படி என்றால் அரசு இவ்வளவு மாணவர்கள் என வெள்ளை அறிக்கை வெளியிடட்டும்.
* 3-வது மொழி இந்தி வேண்டாம் என்று சொன்னால், வேறு ஏதாவது ஒரு மொழியை 3-வது மொழியாக படியுங்கள் என சொல்கிறோம்.
* அரசு பள்ளியில் படிப்பவர்கள் போஸ்ட் அடித்து ஒட்ட வேண்டும் என டிராமா போடுகிறார்கள். உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.