search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசுப்பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்த விவகாரம்: பாஜகவினர் 5 பேர் கைது
    X

    அரசுப்பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்த விவகாரம்: பாஜகவினர் 5 பேர் கைது

    • மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது.
    • அரசுப்பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்குவதாக புகார் எழுந்தது.

    மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக 'சமக்கல்வி எங்கள் உரிமை' எனும் கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது.

    இதனிடையே சென்னை காரப்பாக்கத்தில் பா.ஜ.க.வினர் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து, மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பும் மகேஷ் தெரிவித்திருந்தார்.

    சென்னை காரப்பாக்கம் பகுதியில் பாஜகவின் கையெழுத்து இயக்கத்தில், அரசுப் பள்ளியின் மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்து இடச்செய்த விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரில், கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஜி.சூர்யா, சுந்தரம், கோடீஸ்வரன், மோகன் மற்றும் அன்பரசு ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×