search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திரித்து பேசுகிறார்கள்.. பெரியார் குறித்த சீமானின் சர்ச்சை பேச்சுக்கு ஆ.ராசா பதிலடி
    X

    திரித்து பேசுகிறார்கள்.. பெரியார் குறித்த சீமானின் சர்ச்சை பேச்சுக்கு ஆ.ராசா பதிலடி

    • எனக்கிருக்கும் ஒரே தலைவர் அம்பேத்கர் என்று பெரியார் சொன்னார்.
    • பெரியார் படத்தைப் பார்த்தால் வ.உ.சி. கும்பிடுவார்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் குறித்து அவதூறாக பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியார் குறித்து சீமான் கூறியதாவது:

    அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது ஓர் முரண். இருவரின் சிந்தனையும் ஒன்றா? அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர். பெரியார் தனக்கு தோன்றுவதை எல்லாம் பேசுபவர்.

    தனது பெரும் செல்வத்தை நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்காக விற்றவர் வ.உ.சி. அவர் கடைசி காலத்தில் வறுமையில் தள்ளப்பட்டார். இவர் பேராளியா, பெரியார் போராளியா?

    சமூகநீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கிறதா அல்லது இட ஒதுக்கீட்டிற்கும் ஆனைமுத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா? போராடி பெற்றுக்கொடுத்தது ஆனைமுத்தா, பெரியாரா?" என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மறைமுகமாக விளக்கம் அளித்துள்ளார்.

    திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாட்டில் கலந்து கொண்டி பேசிய ஆ.ராசா, "எனக்கிருக்கும் ஒரே தலைவர் அம்பேத்கர் என்று பெரியார் சொன்னார். தமிழ்நாட்டு மக்கள் என்னிடம் வரவேண்டாம் எனக்கும் சேர்த்து அங்கு பெரியார் இருக்கிறார் என்று அம்பேத்கர் சொன்னார்

    வ.உ.சிக்கும் பெரியாருக்கும் பிரச்சனை இல்லை. பெரியார் படத்தைப் பார்த்தால் வ.உ.சி. கும்பிடுவார்

    ஆனைமுத்துக்கும் பெரியாருக்கும் பிரச்சனை இல்லை. பெரியாருடன்தான் அவர் வாழ்ந்தார். எதையெதையெல்லாம் திரிக்க வேண்டுமோ அவ்வளவும் திரித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×