என் மலர்
தமிழ்நாடு

நடிகை விஜயலட்சுமி வழக்கில் அதிரடி விசாரணை- உயர்நீதிமன்றத்தில் அடுத்த வாரம் அறிக்கை தாக்கல்

- விஜயலட்சுமி வழக்கில் 12 வாரத்துக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்.
- சீமானிடமும் மீண்டும் விசாரணை நடத்தி வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் வளசரவாக்கம் போலீசார் சீமானிடம் நேற்று இரவு 1¼ மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விஜயலட்சுமி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளின் பேரில் 63 கேள்விகள் சீமானிடம் கேட்கப்பட்டன. விஜயலட்சுமியுடன் ஏற்பட்ட பழக்கம், இருவரும் ஒன்றாக இருந்தது, பணம் கொடுத்ததாக கூறப்படுவது போன்ற விசயங்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சீமான் பதில் அளித்துள்ளார்.
இதனை வளசரவாக்கம் போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். இருவரும் சம்மதத்தின் பேரிலேயே ஒன்றாக இருந்தோம் என்று சீமான் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
விஜயலட்சுமி வழக்கில் 12 வாரத்துக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஐகார்்ட்டு உத்தரவிட்டதையடுத்து, வழக்கு விசாரணை வேகமெடுத்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே பெங்களூருக்கு நேரில் சென்று விஜயலட்சுமியிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சீமானிடமும் மீண்டும் விசாரணை நடத்தி வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து அடுத்த வாரத்தில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, "இந்த வழக்கு விசாரணை, கோர்ட்டு உத்தரவின் பேரிலேயே விரைவுப்படுத்தப் பட்டுள்ளதாகவும், 6 வாரங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.