என் மலர்
தமிழ்நாடு

சட்டசபையில் இன்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல்

- 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
- 22, 23 ஆகிய தேதிகள் சட்டசபைக்கு விடுமுறை.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொது பட்ஜெட்டை தொடர்ந்து 15-ந்தேதி (இன்று) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
தொடர்ந்து பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் கருத்துக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுவார்கள்.
22, 23 ஆகிய தேதிகள் சட்டசபைக்கு விடுமுறை. 24-ந்தேதி முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்கிறது. அதன்படி 24-ந்தேதி நீர்வளத்துறை, இயற்கை, வளங்கள், 25-ந்தேதி நகராட்சி நிர்வாகம், 26-ந்தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை.
27-ந்தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை. 28-ந்தேதி கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள். வனம், கைத்தறி மற்றும் துணி நூல்.
ஏப்ரல் 1-ந்தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் (பொதுப்பணித்துறை), 2-ந்தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை. கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, 3-ந்தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, 4-ந்தேதி நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை.
7-ந்தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, 8-ந்தேதி கூட்டுறவு, உணவு, 9-ந்தேதி குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, 15-ந்தேதி செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, மனிதவள மேலாண்மைத்துறை.
16-ந்தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, 17-ந்தேதி சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை. 21-ந்தேதி எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வை, 22-ந்தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, 23-ந்தேதி வணிக வரிகள், பத்திரப்பதிவு, இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள், போக்குவரத்து.
24-ந்தேதி உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, 25-ந்தேதி தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, 26-ந்தேதி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.
28-ந்தேதி பொதுத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், 29-ந்தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், 30-ந்தேதி காவல், தீயணைப்பு துறை மீதான விவாதம் தொடர்ச்சி, முதல்-அமைச்சரின் பதிலுரை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபை கூட்டம் 30 நாட்கள் நடக்க உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாட்களாகும். 31-ந்தேதி (ரம்ஜான்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள் என்று குறிப்பிடப்பட்டு, சட்டசபைக்கு விடுமுறைக்கு விடப்பட்டுள்ளது.