search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேளாண்மை பட்ஜெட்:  கூட்டுறவு பயிர் கடனுக்கு ரூ.17000 கோடி ஒதுக்கீடு
    X

    வேளாண்மை பட்ஜெட்: கூட்டுறவு பயிர் கடனுக்கு ரூ.17000 கோடி ஒதுக்கீடு

    • ரூ.3000 கோடி அளவிற்கு குறுகிய கால கடன்கள் வழங்கப்படும்.
    • வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.

    2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:

    * கூட்டுறவு பயிர் கடனுக்கு ரூ.17000 கோடி ஒதுக்கீடு

    * தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தர ரூ.8 கோடி ஒதுக்கீடு

    * இணைய வர்த்தகம் மூலம் உழவர் சந்தை காய்கறிகள் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

    * 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற வேளாண் பட்ஜெட்டில் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு.

    * புவிசார் குறியீட்டுடன் கூடிய பொருட்களின் சந்தை தேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.20 கோடியில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.

    * வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.

    * 500 பேரை தேர்ந்தெடுத்து ரூ.50 லட்சம் செலவில் ஏற்றுமதியை ஊக்குவிக்க பயிற்சி அளிக்கப்படும்.

    * ரூ.3000 கோடி அளவிற்கு குறுகிய கால கடன்கள் வழங்கப்படும்.

    * புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி ஒதுக்கப்படும்.

    * உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×