என் மலர்
தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்: கரும்புக்கான ஊக்கத்தொகை ரூ.349 ஆக உயர்வு

- பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
- பயிர்க்கடன் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலம்.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
* நவீன வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து செயல்படுவோருக்கு முதல் பரிசு ரூ.2.5 லட்சம் வழங்கப்படும்.
* இயற்கை வேளாண் பொருளை பூமாலை வணிகவளாகம் உள்ளிட்ட அரசு சந்தைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 63 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.22 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
* 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவர். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
* இயற்கை சீற்றத்தால் ஏற்படும் வருவாய் இழப்பிற்காக பயிர் காப்பீடு திட்டம்.
* இடுபொருட்களை ஒரே இடத்தில் பெற கூட்டுறவு வேளாண் சங்கங்களில் விநியோகம்.
* 35 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு காப்பீடு வசதி செய்ய ரூ.841 கோடி நிதி ஒதுக்கீடு.
* தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும்.
* பருத்தியின் உற்பத்தியை அதிகரிக்க பருத்தி உற்பத்தி பெருக்குத் திட்டத்திற்கு ரூ.12.21 கோடி ஒதுக்கீடு.
* கரும்பு டன் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* கரும்புக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகை ரூ.215-ல் இருந்து ரூ.349-ஆக உயர்த்தப்படும்.
* 75 சதவீத மானிய விலையில் காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
* ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் செயல்படுத்தப்படும்.
* 5000 ஏக்கரில் தென்னை மறுநடவு மற்றும் புத்தாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.10.63 கோடி நிதி ஒதுக்கீடு.
* பயிர்க்கடன் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலம்.
* புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க 5 காளான் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.