search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேஜிக் செய்த ஏஐ.. ராஜீவ் காந்தியுடன் இருக்கும் ராகுல் காந்தி.. லைக்குகளை குவிக்கும் புகைப்படம்
    X

    மேஜிக் செய்த ஏஐ.. ராஜீவ் காந்தியுடன் இருக்கும் ராகுல் காந்தி.. லைக்குகளை குவிக்கும் புகைப்படம்

    • நடிகர் விஜய் நடித்த ‘கோட்' திரைப்படத்தில், மறைந்த விஜயகாந்த் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் திரையில் தோன்றினார்.
    • ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த தலைவர்கள், பிரபலங்கள் நவீன காலத்துக்கு ஏற்ப சித்தரிக்கப்பட்டு வருகின்றனர்.

    சென்னை:

    உலகம் நவீனமயமாக்கலில் வீறுநடை போடுகிறது. புதிய புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமாகி வருகின்றன. இதில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைவரையும் வியக்க வைக்கிறது. இறந்து போன தலைவர்கள், பிரபலங்களை நம் கண்முன்னே தோன்றி பேசுவது போன்று இந்த தொழில்நுட்பத்தால் நிகழ்த்திக்காட்ட முடிகிறது.

    நடிகர் விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில், மறைந்த விஜயகாந்த் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் திரையில் தோன்றினார். தி.மு.க. முப்பெரும் விழா- பவள விழாவில், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கருணாநிதி தோன்றி தனது கணீர் குரலில் உரையாற்றி தி.மு.க.வினரை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.

    அதே போன்று ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவில் இதே தொழில் நுட்பத்தில் எம்.ஜி.ஆர். திரையில் தோன்றியதால் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பரித்தனர். மறைந்த தலைவர்கள் மீண்டும் தங்கள் முன்னே தோன்றுவது அரசியல் கட்சி தொண்டர்களை உற்சாகம் அடைய வைக்கிறது. எனவே ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த தலைவர்கள், பிரபலங்கள் நவீன காலத்துக்கு ஏற்ப சித்தரிக்கப்பட்டு வருகின்றனர்.

    தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சட்டமேதை அம்பேத்கர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், தொழில் அதிபர் ரத்தன் டாடா, மைக்கேல் ஜாக்சன் போன்ற மறைந்த பிரபலங்கள் மூலம் தோன்றும் கேரல்ஸ் பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

    அதுபோல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் அவருடைய மகனான ராகுல்காந்தி அமர்ந்து இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ள ஏ.ஐ. தொழில் நுட்ப படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதேபோல் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியுடன், அவருடைய பேரனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இருப்பது போன்ற ஏ.ஐ. படமும் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×