என் மலர்
தமிழ்நாடு

அ.ம.மு.க. காற்றில் கரைந்து கொண்டிருக்கிறது - டி.டி.வி.-க்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி

- கட்சி தொடங்கியபோது இருந்தவர்கள் எல்லாம் நாள்தோறும் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.
- அ.தி.மு.க.வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.
சொந்த நலனுக்காக அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தி விட்டார் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்த நிலையில் அவருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
* அ.ம.மு.க. காற்றில் கற்பூரம் கரைவதுபோல் கரைந்து கொண்டிருக்கிறது.
* கட்சி தொடங்கியபோது இருந்தவர்கள் எல்லாம் நாள்தோறும் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.
* அ.ம.மு.க. கப்பலில் ஓட்டை விழுந்து இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் மூழ்கும் என்று தெரிந்துதான் நிர்வாகிகள் விலகுகின்றனர்.
* டி.டி.வி.யிடம் இருந்து தப்பித்து பிழைத்தால் போதும் என்று அ.ம.மு.க. நிர்வாகிகள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
* டி.டி.வி.தினகரன் 100 சதவீதம் விரக்தியில் பேசுகிறார்.
* அ.ம.மு.க. தொண்டர் பெயர்களை வெளியிட்டால் அ.தி.மு.க. பலவீனமாக உள்ளதா? பலமாக உள்ளதா? என டி.டி.வி. புரிந்துகொள்வார்.
* அ.தி.மு.க.வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அது குறித்து டி.டி.வி. கவலைப்பட வேண்டாம் என்று கூறி உள்ளார்.