என் மலர்
தமிழ்நாடு

X
புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் பட்டா- ஐஏஎஸ் அதிகாரி அமுதா
By
மாலை மலர்20 Feb 2025 12:57 PM IST

- தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோது முதலமைச்சர் தெரிவித்தார்.
- இதுவரை சென்னையில் மட்டும் 60,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை ஷெனாய் நகரில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி அமுதா கூறுகையில்,
* ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
* தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோது முதலமைச்சர் தெரிவித்தார்.
* இதுவரை சென்னையில் மட்டும் 60,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
* சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 86,388 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
Next Story
×
X