search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதிமன்றம் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள்
    X

    மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதிமன்றம் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள்

    • பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது, அவர் அங்கு சென்றிருக்க கூடாது என பேசக்கூடாது.
    • பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது, காதலிப்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

    அப்போது, காவல் துறையிடம் நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

    அதில், " கைதானவருக்கு பேண்டேஜ் போட்டதன் மூலம் அவர் முழு விரவங்களை வெளியிடுவாரா ?

    பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது, அவர் அங்கு சென்றிருக்க கூடாது என பேசக்கூடாது.

    பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது, காதலிப்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம்.

    புலன் விசாரணை நடந்து வரும்போதே, ஞானசேகரன் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார் என்று எப்படி கூற முடியும் ?

    புலன் விசாரணை அதிகாரி, காவல் ஆணையருக்கு கீழ் பணிபுரிபவர், அவர் எப்படி மற்றொருவரை கண்டுபிடிப்பார் ?

    கைது செய்யப்பட்டவர் காலில் பேண்டேஜ் ஏன் போடப்பட்டுள்ளது ?

    குற்றத்தை தடுக்க வேண்டியது அரசின் கடமை, ஒருவரை கைது செய்தததற்காக பாராட்ட வேண்டும் என எப்படி சொல்ல முடியும்?

    மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலைக்கழக என்ன செய்துள்ளது ? நிர்பயா நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க அண்ணா பல்கலைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு என்ன செய்துள்ளது.

    கைதானவருக்கு பேண்டேஜ் போட்டதன் மூலம் அவர் முழு விவரங்களை வெளியிடுவாரா ?

    குற்றத்தை தடுக்க வேண்டியது அரசின் கடமை, ஒருவரை கைது செய்ததற்காக பாராட்ட வேண்டும் என எப்படி சொல்ல முடியும் ? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    பிறகு, இந்த வழக்கு குறித்த விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் எழுப்பி கேள்விகளுக்கு பதிலளித்து நாளை அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×