search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்தி திணிப்பு மாயைக்கு எதிராக அட்டைக்கத்தியை வீசாதீர்கள் - அண்ணாமலை
    X

    இந்தி திணிப்பு மாயைக்கு எதிராக அட்டைக்கத்தியை வீசாதீர்கள் - அண்ணாமலை

    • மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 36 மணிநேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
    • பா.ஜ.க. கையெழுத்து இயக்கம் வெற்றி பெற்றதை கண்டு முதலமைச்சர் அதிர்ச்சியடைந்தது வெளிப்படையாகவே தெரிகிறது.

    சென்னை:

    இந்தி திணிப்பு என்ற மாயைக்கு எதிராக அட்டைக்கத்தியை வீசாதீர்கள் என்று முதலமைச்சர் டேக் செய்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

    மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 36 மணிநேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க. சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு வரவேற்பு பெற்று வருகிறது. கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான உங்கள் கூச்சல்கள் எங்களுக்கு எந்த பாதிப்பையும் அளிக்காது.

    பா.ஜ.க. கையெழுத்து இயக்கம் வெற்றி பெற்றதை கண்டு முதலமைச்சர் அதிர்ச்சியடைந்தது வெளிப்படையாகவே தெரிகிறது.

    ஆட்சியில் இருந்தபோதும் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கையெழுத்து இயக்கத்தை கூட தி.மு.க.வால் நடத்த முடியவில்லை.

    இந்தி திணிப்பு என்ற மாயைக்கு எதிராக அட்டைக்கத்தியை வீசாதீர்கள். தி.மு.க.வின் போலி இந்தி திணிப்பு நாடகம் ஏற்கனவே அம்பலமாகிவிட்டது. நீங்கள் அதணை உணராதது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.



    Next Story
    ×