search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் அன்பில் மகேஷை விமர்சித்த அண்ணாமலை
    X

    அமைச்சர் அன்பில் மகேஷை விமர்சித்த அண்ணாமலை

    • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடையாது என்று கூறுகிறார்.
    • இத்தனை ஆண்டு காலம் இவர்களின் இதுபோன்ற இரட்டை வேடத்தால் நாம் ஏமாந்தது போதும்.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நேற்று, தமிழகத்தின் பள்ளிக் கல்வி அமைச்சர், பல மொழிகளைக் கற்றுக் கொடுப்பதைப் பாடத்திட்டமாகக் கொண்ட ஒரு தனியார் CBSE பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடையாது என்று கூறுகிறார்.

    இத்தனை ஆண்டு காலம் இவர்களின் இதுபோன்ற இரட்டை வேடத்தால் நாம் ஏமாந்தது போதும். நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கல்வியில் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்,

    http://puthiyakalvi.in இணையதளத்தில் உங்கள் ஆதரவைப் பதிவு செய்யவும் என கூறியுள்ளார்.



    Next Story
    ×