search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஃபெஞ்சல் புயல் பாதிப்பு- அண்ணாமலை ஆய்வு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஃபெஞ்சல் புயல் பாதிப்பு- அண்ணாமலை ஆய்வு

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
    • உப்பளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

    ஃபெஞ்சல் புயலால் வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் தேங்கிய நீரால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார்.

    மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். உப்பளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.


    Next Story
    ×