என் மலர்
தமிழ்நாடு

சுயநினைவற்றவரைப் போல பிதற்றித் திரிகிறார் அண்ணாமலை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

- நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.
- நீ சரியான ஆளாக இருந்தீன்னா.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு.. என்றார்.
கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசினார்.
அப்போது அவர், " பிரதமர் மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று சொன்னோம். நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. நீ சரியான ஆளாக இருந்தீன்னா.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு.. எங்கப்பா முதலமைச்சர்.. தாத்தா ஐந்து முறை முதலமைச்சர்ன்னு நீ சொல்லிப்பாரு பார்க்கலாம்.
வாயில் இருந்து எங்க தாத்தா ஐந்து முறை முதல்வர்.. எங்கப்பா சிட்டிங் முதல்வர். நான் துணை முதல்வர் என்று சொல்லிப்பாரு பார்க்கலாம்." என்று அண்ணாமலை பேசினார்.
இதற்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது:-
சுயநினைவற்றவரைப் போல பிதற்றித் திரிகிறார் அண்ணாமலை.
அரசியல் அரைவேக்காடு அண்ணாமலை தொடர்ந்து முதலமைச்சர், துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம்.
நாவடக்கம் அற்றவர், அநாகரீகமானவர் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கும் அண்ணாமலை மக்களிடம் அம்பலப்படுகிறார் என்பது நிதர்சனம்.
செருப்பில்லாமல் நடப்டேன் என ஷூ கால்களுடன் வலம் வருவது, சாட்டையால் அடித்து கொண்டதை நாடே எள்ளி நடையாடுகிறது.
கார்ப்பரேட், ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக அரசியல் செய்யும் அண்ணாமலைக்கு திராவிட மாடல் பற்றி பேச தகுதியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.