search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை, எல். முருகன்
    X

    இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை, எல். முருகன்

    • அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • இளையராஜாவை சந்தித்தது குறித்து இணை அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    லண்டனில் வருகிற 8-ந்தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா நடத்த உள்ளார். இதற்காக இளையராஜாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு. ஐந்து தசாப்தங்களாக திரையுலகை இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா அவர்கள், "வேலியன்ட்" எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற மார்ச் 8 அன்று அரங்கேற்ற உள்ளதை முன்னிட்டு, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்து வாழ்த்து கூறி மகிழ்ந்தேன். நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற, தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    இதனிடையே இளையராஜாவை சந்தித்தது குறித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "தமிழ்த் திரை இசைக் கலைஞர், இசைஞானி அய்யா இளையராஜா அவர்களை இன்று நேரில் சந்தித்து, வருகின்ற 8-ஆம் தேதி லண்டன் நகரில் அவர் அரங்கேற்றம் செய்கின்ற 'சிம்பொனி' இசை நிகழ்ச்சி வெற்றி பெற வேண்டி வாழ்த்து தெரிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×