என் மலர்
தமிழ்நாடு

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காது- அண்ணாமலை

- தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கையை ஆதரித்து 5-ந்தேதி முதல் பா.ஜ.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளோம்.
- தொகுதி மறுசீரமைப்பு பற்றிய பிரச்சனையை எழுப்பியது முதலமைச்சர் தான்.
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. பங்கேற்காது என்று அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணங்களை, முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் விவரித்துள்ளார்.
இதையடுத்து, திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கையை ஆதரித்து 5-ந்தேதி முதல் பா.ஜ.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளோம். தொகுதி மறுவரையறை விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என அமித்ஷா தெளிவுப்படுத்தி உள்ளார். தொகுதி மறுசீரமைப்பு பற்றிய பிரச்சனையை எழுப்பியது முதலமைச்சர் தான். அப்பிரச்சனைக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். இந்தி திணிப்பு நாடகத்தை மக்கள் ஏற்க மறுத்ததால் தொகுதி மறுவரையறை குறித்து பேசி திசை திருப்ப முயற்சி. மத்திய அரசு நிதி அளிக்கவில்லை என இன்னும் எவ்வளவு காலம் தான் பொய்களை பரப்ப முடியும் கூறினார்.
வரும் மார்ச் 5, 2025 அன்று கூட்டப்பட உள்ள தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், @BJP4TamilNadu பங்கேற்கப் போவதில்லை என்று, தமிழக முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
— K.Annamalai (@annamalai_k) March 1, 2025
மேலும், கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணங்களை, முதலமைச்சருக்கு எழுதியுள்ள… pic.twitter.com/PAaUOCASWG
தொடர்ச்சி. (2/2) pic.twitter.com/YM8FGSOKZF
— K.Annamalai (@annamalai_k) March 1, 2025