என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![டெல்லி வெற்றி - மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்வு செய்துள்ளதாக அண்ணாமலை கருத்து டெல்லி வெற்றி - மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்வு செய்துள்ளதாக அண்ணாமலை கருத்து](https://media.maalaimalar.com/h-upload/2025/02/08/9077646-annamalai01.webp)
டெல்லி வெற்றி - மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்வு செய்துள்ளதாக அண்ணாமலை கருத்து
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
- பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை பிரதிபலிக்கிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் 48 இடங்களில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. இதனால் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் பா.ஜ.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பா.ஜ.க. வெற்றி குறித்து மாநில தலைவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சியை டெல்லி மக்கள் நிராகரித்து, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து மூன்றாவது முறையாக அழித்து, சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர். இன்றைய முடிவுகள், இந்திய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் பரப்பும் பிளவுபடுத்தும் அரசியலை விட, நமது பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை பிரதிபலிக்கிறது.
இந்த அற்புதமான வெற்றிக்காக டெல்லி பா.ஜ.க.வின் அனைத்துத் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
The people of Delhi have rejected the corrupt AAP, decimated the Congress party for the third consecutive time, and have given @BJP4Delhi a historic mandate in the assembly elections. Today's results reflect that people have chosen the development politics of our Hon PM Thiru… pic.twitter.com/linfBkPDsp
— K.Annamalai (@annamalai_k) February 8, 2025