என் மலர்
தமிழ்நாடு
மீண்டும் புயல் தாக்கும் அபாயம்: 3 மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்படும்- ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிப்பு
- கார்த்திகை மாதத்தில் புதுச்சேரிக்கு கிழக்கே புயல் சின்னம் உருவாகி பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
- அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
முக்கிய நிகழ்வுகள் குறித்து கணிப்பதில் ஜோதிடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதில் ஆற்காடு பஞ்சாங்கம் கணித்த நிகழ்வுகள் அப்படியே நடந்து வருகிறது. அதன் படி தற்போது புதுச்சேரி தமிழகத்தை தாக்கிய புயல் மழை குறித்தும் ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் சுத்த வாக்கிய சர்வமுகூர்த்த பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் கணித்துள்ளார்.
குரோதி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில் 43-வது பக்கத்தில் புயல் தாக்கம் குறித்த தகவல் வந்துள்ளது. அதில் கார்த்திகை மாதத்தில் புதுச்சேரிக்கு கிழக்கே புயல் சின்னம் உருவாகி பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் மீண்டும் சிதம்பரத்துக்கு கிழக்கு பகுதியிலும், விஜயவாடாவுக்கு தென்கிழக்கு பகுதியிலும் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சூறைக்காற்றுடன் கனமழை பொழியும். மூணாறு, ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி பகுதிகள் பலத்த மழையால் பாதிப்புக்குள்ளாகும்.
அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று கணித்துள்ளார்.