என் மலர்
தமிழ்நாடு
X
புழல் சிறையில் காவலர்கள் மீது தாக்குதல்- 2 பேர் மருத்துவமனையில் அனுமதி
Byமாலை மலர்11 Jan 2025 2:26 PM IST
- பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் அடைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து காவலர்கள் செல்போன், சார்ஜரை பறிமுதல் செய்தனர்.
- காயமடைந்த சிறைக்காவலர்கள் மணிகண்டன், சாந்தகுமார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை புழல் சிறையில் பயங்கரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் அடைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து காவலர்கள் செல்போன், சார்ஜரை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இன்று மீண்டும் சோதனை செய்ய முயன்றபோது காவலர்கள் மீது கைதிகள் தாக்குதல் நடத்தினர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியதில் சிறைக்காவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.
காயமடைந்த சிறைக்காவலர்கள் மணிகண்டன், சாந்தகுமார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறையில் கைதிகள் காவலர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
×
X