என் மலர்
தமிழ்நாடு
ஓசூர் விமான நிலையம் தொடர்பான கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில்
- ஓசூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
- ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச நிறுவனங்கள் பலவும் கால்தடம் பதித்து வருகின்றன. இதற்கேற்ப ஓசூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஓசூரில் பிரம்மாண்ட தொழில் நகரை கட்டமைக்க டாடா குழுமம் முன்வந்துள்ளது. மேலும் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த விமான நிலையம் அமைந்தால் பெங்களூரு மற்றும் ஓசூர் ஆகிய 2 நகரங்களுக்கு வர்த்தக ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் போட்டு கொண்ட ஒப்பந்தத்தின்படி, 150 கிலோமீட்டர் தூரத்திற்குள் வேறு எந்த விமான நிலையமும் இருக்கக்கூடாது. இது தமிழக அரசுக்கு சிக்கலாக மாற வாய்ப்புள்ளது.
இந்நிலையில், ஓசூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை வைத்திருந்தார்.
அவரது கோரிக்கைக்கு பதில் அளித்த விமான போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம்மோகன், "பெங்களூருவில் இருந்து 150 கி.மீ.க்குள் இருப்பதால் விமான நிலையம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய அரசு முத்தரப்பும் பேச்சு நடத்தி ஒரு மித்த முடிவு எடுத்தால் உதவத் தயாராக இருக்கிறோம்"