என் மலர்
தமிழ்நாடு

தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என கூறிவிட்டு இப்படி BLACKMAIL செய்வதா? - அன்பில் மகேஷ்

- PM SHRI திட்டத்தில் கையெழுத்து போட்டால் 30 நிமிடங்களில் நிதியை விடுவிக்கச் சொல்கிறேன்" என அமைச்சர் தெரிவித்தார்.
- நாடு முழுவதும் தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்றே சொல்லுவேன்” என அமைச்சர் சொன்னார்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உட்பட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களிடம் சமர்ப்பித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டின்
— Anbil Mahesh (@Anbil_Mahesh) February 16, 2025
கல்வி வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செயல்படுவதோடு மட்டுமல்லாமல் சர்வாதிகாரப் போக்குடன் ஒன்றியக் கல்வித்துறை அமைச்சர் பேசியுள்ளார். நமக்கு வழங்க வேண்டிய நிதியை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்ததோடு மட்டுமல்லாமல், மொழி திணிப்பிற்கான முயற்சியையும் ஒன்றிய அரசு… pic.twitter.com/TjBKXht62Y
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "கல்வி நிதி விடுவிப்பு தொடர்பாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை டெல்லியில் சந்தித்தபோது, "மும்மொழிக் கொள்கையை ஏற்பதில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறீர்கள்? கல்வியில் இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறீர்கள். நாடு முழுவதும் தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்றே சொல்லுவேன்" எனச் சொன்னார்.
இவ்வளவு உத்வேகமாக பேசிவிட்டு, "PM SHRI திட்டத்தில் கையெழுத்து போடுங்கள்.. 30 நிமிடங்களில் நிதியை விடுவிக்கச் சொல்கிறேன்" எனத் தெரிவித்தார். இதைத்தான் நமது முதலமைச்சர் 'BLACK MAIL' எனக் கூறுகிறார்" என்று தெரிவித்தார்.