என் மலர்
தமிழ்நாடு
மத்திய அரசு பணிந்தது: டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து குறித்து மு.க. ஸ்டாலின் கருத்து
- நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்.
- இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் அமைய இருந்த டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிறுத்தி வைக்க மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாலை மற்றும் ஊர்த்தலைவர்கள் மத்திய அமைச்சரை சந்தித்து திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி வலியுறுத்தினர். இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, திட்டம் ரத்து செய்யப்படும். இதற்கான அறிவிப்பு நாளை (இன்று) அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என உறுதி அளித்திருந்தார்.
அதன்படி டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக இன்று சுரங்கத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
* நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்!
* சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது!
* இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது!
இவ்வாறு மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.