search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென்தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

    அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    Next Story
    ×