என் மலர்
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி மண்டலங்கள் 20ஆக உயர்வு

- சென்னை மாநகராட்சியில் தற்போது 15 மண்டலங்கள் உள்ளன.
- மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் தற்போது, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்போக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றி அமைப்பதென அரசு முடிவு செய்துள்ள நிலையில் மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடையவும் முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் மண்டலங்கள் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் தற்போதைய மண்டலங்களின் நிர்வாகப் பகுதிகளை சீரமைத்து மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து, 20-ஆக உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR@CMOTamilnadu @mkstalin @KN_NEHRU @mp_saminathan pic.twitter.com/mrDQfV6UxQ
— TN DIPR (@TNDIPRNEWS) February 28, 2025