என் மலர்
தமிழ்நாடு
கிறிஸ்துமஸ் பண்டிகை- அரசியல் தலைவர்கள் வாழ்த்து
- உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் அவர் போதித்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுகின்றன.
- இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்,
"உன் மீது நீ அன்பு செலுத்துவது போல், அடுத்தவர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்" என்று எடுத்துரைத்த அன்பின் திருஉருவமாம், கருணையின் வடிவமாம் தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த திருநாளான கிறிஸ்துமஸ் நாளில்,
"நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டும்" என்ற இயேசுபிரானின் போதனையை மனதில்கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அன்பு கிறிஸ்தவ சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும், எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
"உன் மீது நீ அன்பு செலுத்துவது போல், அடுத்தவர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்" என்று எடுத்துரைத்த அன்பின் திருஉருவமாம், கருணையின் வடிவமாம் தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த திருநாளான #கிறிஸ்துமஸ் நாளில், "நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் நாம்… pic.twitter.com/chg0upS9fI
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) December 25, 2024
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இயேசு பெருமான் பிறந்தநாளை உலகமே கொண்டாடும் இனிய வேளையில் கிறித்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஈராயிரம் ஆண்டுகளாக இயேசு பெருமானின் வார்த்தைகள் மானுடத்தை வழிநடத்துகின்றன. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் அவர் போதித்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுகின்றன.
மனிதகுலம் வெறுப்பை எதிர்கொள்வதற்கு ஏதுவான மாமருந்து அன்பின் வழி பெருக்கும் சகோதரத்துவம் என்பதைப் போதிப்பதே இயேசுநெறியாகும்!
வெறுப்புக்கு வெறுப்பை, வன்முறைக்கு வன்முறையோ தீர்வாகாது என்றும், அன்பும் கருணையும் தான் வெறுப்பைத் தணிப்பதற்கும் வன்முறையைத் தடுப்பதற்கும் வழிமுறை என்றும் உலகுக்கு எடுத்துரைக்கும் அறநெறியே இயேசுபெருமானின் போதனையாகும். அதன்வழியே மனிதகுலத்தினிடையே நல்லிணக்கத்தை வளர்த்து சகோதரத்துவத்தைத் தழைக்க செய்ய இயலும்.
அத்தகைய சகோதரத்துவமே மானுட அமைதிக்கும் உலக அமைதிக்கும் வழிவகுக்கும். எனவே, இயேசுபெருமான் பிறந்தநாளில் இம்மண்ணில் சகோதரத்துவத்தைத் தழைக்கச் செய்ய உறுதியேற்போம்.
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.
திசம்பர் -25: கிறிஸ்துமஸ் பெருவிழா!-------------------------------------இயேசு பெருமான் பிறந்தநாளில் சகோதரத்துவம் தழைக்க உறுதியேற்போம்! அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! ------------------------------------இயேசு பெருமான் பிறந்தநாளை உலகமே கொண்டாடும் இனிய வேளையில்… pic.twitter.com/5EONxxxT0b
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 24, 2024
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும்.
அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.