என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![அண்ணனாக, தம்பியாக, அப்பாவாக, மகனாக, உறவாக, உடன்பிறப்பாக - சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு அண்ணனாக, தம்பியாக, அப்பாவாக, மகனாக, உறவாக, உடன்பிறப்பாக - சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு](https://media.maalaimalar.com/h-upload/2025/01/22/8449376-mkstalin004.webp)
"அண்ணனாக, தம்பியாக, அப்பாவாக, மகனாக, உறவாக, உடன்பிறப்பாக" - சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
- மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை செலவு செய்கிறோம்.
சிவகங்கை:
சிவகங்கையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
* வீரமும், விவேகமும் விளைந்த மண் சிவகங்கை. திமுக ஆட்சி அமைந்தாலே நலத்திட்ட உதவிகள் சிவகங்கையை தேடி வரும். உங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் உறவாக நான் இருக்கிறேன்.
* பள்ளி கட்டடம், ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை, சிவகங்கை புதிய நகராட்சி கட்டிடம், 59 திருக்கோவிலில் ரூ.14 கோடி செலவில் கோவில் திருப்பணி, மாணவர்களுக்கு தங்கும் விடுதி, மருத்துவமனை விரிவாக்கம், நியோ ஐ.டி.பார்க், தியாகி ஜீவானந்தம் மணிமண்டபம், செட்டிநாடு வேளாண் கல்லூரி, சிவகங்கை மாவட்டத்தில் பல ஊர்களில் ரூ.616 கோடி செலவில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
* எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
* சிங்கம்புணரி, திண்டுக்கல், காரைக்குடி செல்லும் வாகனங்கள் திருப்பத்தூருக்குள் வராமல் செல்ல ரூ.50 கோடியில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும்.
* சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திற்கு புதியதாக ரூ.89 கோடியில் கட்டடம் கட்டப்படும்.
* காரைக்குடி மாநகராட்சிக்கு ரூ.30 கோடியில் புதிய அலுவலகம் கட்டித்தரப்படும்.
* இன்னொருவரின் அறிக்கையை காப்பியடித்து அறிக்கை கொடுக்கிறார். திண்ணையில் அமர்ந்து பேசுவது போல் வெட்டிக்கதை பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. எதிர்க்கட்சி தலைவர் போடும் கணக்குகள் அனைத்தும் தப்பு கணக்குகள் தான்.
* மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என கூறிய அதிமுக அதனை நிறைவேற்றியதா? 58 வயதுக்கு மேல் உள்ளோருக்கு இலவச பஸ் பாஸ், பொது இடத்தில் Wifi வசதி என வெற்று வாக்குறுதி அளித்தது அதிமுக தான். பதவிக்காக மட்டும் டெல்லிக்கு சென்றனர் அதிமுகவினர்.
* 2013-ம் ஆண்டு முதல் தமிழகத்தை பற்றாக்குறை மாநிலமாக மாற்றியது எடப்பாடி பழனிசாமிதான். தவழ்ந்து தவழ்ந்து தமிழ்நாட்டை தரைமட்டத்திற்கு கொண்டு வந்த எடப்பாடி திமுக அரசை வீழ்த்த நினைக்கிறார்.
* 2021 தேர்தலுக்கு திமுக சார்பில் கொடுத்த 505 வாக்குகுறதிகளில் 389 வாக்குறுதிகள் நிறைவேற்றம். 116 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
* மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை செலவு செய்கிறோம்.
* தமிழ்நாட்டை திவாலாக்க வேண்டும் என்பது தான் எடப்பாடியின் நோக்கமா? அரசின் எந்த திட்டத்தை வீண் செலவு என கூறுகிறார்?
* எங்களில் செயல்பாடுகளை நினைவில் கொண்டு திமுக ஆட்சி திட்டங்களுக்கு மக்கள் அளிக்கும் முதல் மதிப்பெண் போதும் என்றார்.